IBPS PO தேர்வர்களின் கவனத்திற்கு – Admit Card / Call Letter வெளியீடு!
Institute of Banking Personnel Selection எனப்படும் IBPS ஆனது Probationary Officer (PO) / Management Trainee (MT) பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 3955 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
விண்ணப்பதாரர்கள் Prelims மற்றும் Mains தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் தற்போது IBPS PO / MT பணிக்கான தேர்வு எழுதுபவர்களுக்கான Admit Card / Call Letter வெளியாகியுள்ளது.
இதை IBPS அதன் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. IBPS PO / MT தேர்வு எழுதுவதற்கு Call Letter (Admit Card) கட்டாயமானதாகும். இதை தேர்வு நடைபெறும் தேதி இடம் குறித்த முழு விவரங்களும் அடங்கி இருக்கும். இப்பணி தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி Call Letter-ஐ டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
Download செய்யும் முறை:
A. விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு செல்லவும்.
B. பின் Click here to Download Online Preliminary Exam Call Letter for IBPS PO CRP XIV 2024 என்பதை கிளிக் செய்யவும்.
C. அது புதிய Login Page-க்கு அழைத்து செல்லும்.
D. விண்ணப்பதாரர்கள் அதில் கேட்கப்படும் registration number or Roll Number மற்றும் Date of Birth/Password பூர்த்தி செய்து Admit Card பெற்றுக்கொள்ளலாம்.
E. பின் Download என்பதை கிளிக் செய்து Download செய்துகொள்ளவும்.

Post a Comment