18 வயது நிரம்பிய பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,100/- வழங்கப்படும்…!! ” முதல்வர் அறிவிப்பு”..!!
நாட்டில் உள்ள பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கும் நிதி உதவி திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டம் பல்வேறு மாநிலங்களில் பெரிதளவில் பேசப்பட்டு வந்ததை தொடர்ந்து, தற்போது டெல்லியில் செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, மகிலா சம்மன் திட்டத்தின் கீழ் டெல்லியில் உள்ள 18 வயது பூர்த்தி அடைந்த பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்போவதாக முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும், இத்திட்டத்திற்கு நாளை(டிசம்பர் 13) முதல் தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, மீண்டும் AAP கட்சி ஆட்சிக்கு வருமானால், அந்த தொகையை ரூ.2100 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

Post a Comment