அரசு ஊழியர்களுக்கு வந்தாச்சு குட் நியூஸ்..!! அகவிலைப்படி உயர்ந்தாச்சு..? “இதோ முழு விவரம் உங்களுக்காக”..!
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி(DA) மற்றும் அகவிலை நிவாரணம்(DR) ஆனது அகில இந்திய நுகர்வோர் குறியீட்டின் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், அகவிலை அறிவிப்புகள் ஆண்டுக்கு 02 முறை என்ற கணக்கில் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படுகிறது. அந்த வகையில், தற்போது 8 வது ஊதிய குழு அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த 8-வது குழு அடுத்த ஆண்டு(2025) ஜனவரி மாதத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது, 7-வது ஊதிய குழுவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2.57% ஃபிட்மெண்ட் காரணி பயன்படுத்தப்படுவதை தொடர்ந்து , இந்த 8 வது ஊதிய குழு நடைமுறைப்படுத்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மெண்ட் காரணி 2.86% மடங்கு அதிகரிக்கும். இதன்மூலம், 2026-ம் ஆண்டில் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.35,400 ரூபாயாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஓய்வூதியம் பெறுவோருக்கு ஃபிட்மெண்ட் காரணி 2.86% அதிகரிக்கும் பட்சத்தில், ரூ.9,000-ல் இருந்து ரூ.25,740 ரூபாயாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment