வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கலாம் தெரியுமா . . . ? || இப்போ தெரிஞ்சுக்கோங்க. . .!
இன்றைய கால கட்டத்தில் வங்கி (Bank) என்பது முக்கியமான ஒன்றாகும். இதன் மூலம் பணம் டெபாசிட் செய்யவும், தேவைப்படும் போது எடுக்கவும் பயன்படுகிறது. சேமிப்பு மற்றும் முதலீடு போன்றவையும் வங்கிகளில் செய்யப்படுகிறது. இந்திய முழுவதும் டிஜிட்டல் (Digital) மாயமாகியுள்ளது. சிறு பொருள் முதல் பெரிய பெரிய பொருட்கள் வரை எது வாங்கினாலும் QR கோடு மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு பணம் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் வங்கியில் எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும் என்பதற்கும் ஒரு எல்லை உண்டு.
சேமிப்புக் கணக்கில் ரூ.10 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால், வருமான வரித் துறைக்குத் (Income Tax) தெரிவிக்க வேண்டும். நிலையான வைப்பு, பரஸ்பர நிதி, பத்திரங்கள் மற்றும் பங்குகளில் செய்யப்படும் முதலீடுகளுக்கும் இதே விதி பொருந்தும்.
நடப்புக் கணக்கு (Current Account) வைத்திருப்பவர்களுக்கு வரம்பு 50 லட்சம். நாட்டின் முக்கிய பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் சேமிப்பு கணக்கு வைப்புகளுக்கு 2.70% முதல் 4% வரை வட்டியை வழங்குகின்றன. நாட்டில் சுமார் 10 கோடி சேமிப்புக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment