தேசிய தேர்வு முகமை(NTA) ஆனது நாடு முழுவதும் தகுதியான கல்லூரி உதவி பேராசிரியர், ஜேஆர்ஃப், PHD முதலியவற்றை தேர்வு செய்வதற்காக 83 பாடங்களில் UGC NET தேர்வை ஆண்டுதோறும் 2 முறை நடத்தி வருகிறது.
மேலும், இத்தேர்வானது கடந்த ஜூன் மாதம் 18ம் தேதியன்று நடத்தப்பட்டது. இதில், 9,08,580 பேர் தேர்வு எழுதி இருந்த நிலையில், அடுத்த நாளே “DARK WEB”-ல் வினாத்தாள்கள் வெளியானதால், அத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மீண்டும் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 5 தேதி வரை UGC NET தேர்வு கணினி வாயிலாக நடைபெற்றது. மேலும், இத்தேர்வின் இறுதி விடைக்குறிப்புகள் கடந்த வாரம் வெளியானதை தொடர்ந்து, இன்று தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.
மேலும், தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை(NTA)-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ugcnet.nta.ac.in/ என்ற லிங்க் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Post a Comment