என்ன சொல்லுறீங்க…? || அடுத்தவாரம் அரையாண்டு தேர்வு கிடையாதா.. ? || இருந்தும் 9 நாள் லீவு ஆ..? அட்ரா சக்க..
பெஞ்சல் புயல் பாதிப்பு மக்களை வாட்டி வரும் நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டது. மேலும் சில மாவட்டங்களில் இன்னும் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாணவர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநரகம் தற்போது புதிய செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது.
அதாவது புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நடக்கவிருந்த அரையாண்டு தேர்வுகளை ஒத்திவைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளை ஜனவரி 02-ம் முதல் 10-ம் தேதி வரை நடத்த முடிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து முந்தைய அட்டவணைப்படி அறிவிக்கப்பட்ட அரையாண்டு விடுமுறை (டிசம்பர் 24 – ஜனவரி 01) இம்மாவட்டங்களுக்கும் பொருந்தும் என பள்ளிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

Post a Comment