PF திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? அதில், மறைந்து கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள் இதோ உங்களுக்காக”..!!

 




PF திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? அதில், மறைந்து கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள் இதோ உங்களுக்காக”..!!



ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் (EPFO) ஆனது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும்  ஊழியர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பணி ஓய்வு தொகையை வழங்கும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. அதாவது, இந்த EPF திட்டத்தில் மாதாந்திர ஊதியத்தில் இருந்து 12% தொகையை, அந்நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் தொழிலாளர் என இருவரும் பங்களித்து சேமித்து வைப்பது ஆகும். இந்தத் தொகையில் இருந்து 1 பகுதி,  பணியில் ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு PF தொகையாக வழங்கப்படும்.



அதன்படி, சமீபத்தில் PF  தொகையை  ATM-ல் எடுக்கலாம் என்று EPFO ஆணையம் அறிவித்திருந்தது. அந்த வகையில், PF நமக்கு எவ்வளவு முக்கிய பங்கை வகிக்கிறது என்பதை கீழே விரிவாக காண்போம். அதாவது, நீங்கள் மாதந்தோறும் PF திட்டத்தில்  பங்களித்து வரும்  தொகையானது, உங்களின் பணி காலம் நிறைவடையும் போது மொத்த தொகையாக கிடைக்கும். 

மேலும், நீங்கள் பாதியில் பணியை விட்டு விலகினாலும் பங்களித்த தொகை அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும். ஒருவேளை, உங்களுக்கு வேறு வேலை கிடைப்பதற்கு கால தாமதம் ஏற்பட்டாலும், இந்த PF தொகையை வைத்து சிறிது காலம் வாழ்க்கையை நடத்தலாம்.


மேலும், இந்த EPF திட்டத்தில் நீங்கள் ஒரு முறை பங்களிக்க தொடங்கி விட்டீர்கள் என்றால், பாதியில் பணத்தை எடுக்காமல் இருக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே பணி ஓய்வு நேரத்தில் நினைத்த அளவிற்கு பணம் உங்களுக்கு கிடைக்கும்




Post a Comment

Previous Post Next Post

High Ads

Square Ads