தொழில் முனைவோர்களுக்கு ரூ.75 லட்சம் வரை மானியம் வழங்கும் தமிழக அரசு…!! ” இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா”..??
தமிழகத்தில் உயர் கல்வியில் பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பட்டப்படிப்பு, டிப்ளமோ மற்றும் ITI முதலியவற்றை படித்து முடித்த இளைஞர்களுக்கு உரிய பயிற்சி அளித்து, முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்க வேண்டும் என்பதற்காக புதிய தொழில்முனைவோர் மற்றும் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டம்(TN NEEDS SCHEME) என்பதை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.
இவ்வாறு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் படிப்பை முடித்த இளைஞர்களுக்கு 1 மாதம் விருப்பப்பட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அவர்களுக்கு தொழில் சார்ந்த திட்டங்களை உருவாக்க வழிவகை செய்கிறது.
அதன் பின்னர், தொழில் ஆரம்பிக்க தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பில் வங்கி கடன்(Bank Loan) வழங்கப்படுகிறது. அதாவது, முதல் தொழில் முனைவோருக்கு திட்ட மதிப்பீட்டில் 25%(அதிகபட்சம் ரூ.75 லட்சம்) முதலீடு மானியமும் மற்றும் 3% வட்டி மானியமும் வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
21-35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மேலும் கடந்த 03 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
இதற்கு குடும்ப அட்டை மற்றும் வருமான வரி சான்று முதலியவை தேவையில்லை.
மேலும், இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் குறைந்தபட்ச முதலீடு ரூ. 5 லட்சம் தொடங்கி அதிகபட்சமாக ரூ. 5 கோடி வரை முதலீடு செய்யலாம். பொதுப்பிரிவினர் 10% மற்றும் மற்ற பிரிவினர் 5% என்ற அடிப்படையில் சித்தத்தில் பங்கு செய்ய வேண்டும்.
இத்திட்டத்தில் இணைய விருப்பமுள்ளவர்கள் www.msmeonline.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும், கடனை திருப்பிச் செலுத்துவதற்கு 09 ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு கூடுதல் விவரங்களுக்கு https://www.msmeonline.tn.gov.in/needs/needs_desc.php என்ற இணையதளத்தை பார்வையிடவும்..

Post a Comment