மாணவர்கள் கவனத்திற்கு… SBI வழங்கும் இந்த கல்வி கடன் வகைகளை பற்றி கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க…

 



மாணவர்கள் கவனத்திற்கு… SBI வழங்கும் இந்த கல்வி கடன் வகைகளை பற்றி கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க…



மக்களின் நிதி பரிவர்த்தனைகளை நிர்வகிப்பதில் வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், பொதுமக்களிடமிருந்து வைப்புகளை ஏற்றுக்கொள்வது மற்றும் கடன் தேவைகளை நிவர்த்தி செய்வது போன்ற வேலைகளை செய்கிறது. 

இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) மாணவர்களுக்கு வழங்கும் பல்வேறு கடன்களை பற்றி இப்பதிவில் காண்போம்.



அதாவது மாணவர்களின் உயர்கல்வி அல்லது திறன்களை மேம்படுத்துவதற்காக SBI கல்விக் கடன் அளிக்கிறது. இவற்றில் ஆறு வகைகள் உள்ளன. முதல் வகையான “மாணவர் கடன்” மூலம், மாணவர்கள் ரூ.7.5 லட்சம் வரை 11.15 % வட்டி விகிதத்தில் நிதி உதவிகளை பெற்றுக் கொள்ளலாம். இரண்டாவது வகையான “ஸ்காலர் லோன்”- IIT, NIT மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் தொழில்முறைப் படிப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.7.5 லட்சத்திற்கு 8.10 % வட்டி விகிதத்தில் கடன் வழங்குகிறது. மூன்றாவது வகையான “திறன் கடன்” மூலம் திறன்களை மேம்படுத்த விரும்பும் மாணவர்களுக்கு ரூ. 1.5 லட்சம் வரை 10.65 % வட்டி விகிதத்தில் கடன் அளிக்கிறது . 

நான்காவது வகையான “உலகளாவிய எட்-அட்வாண்டேஜ்” யில் ரூ. 7.5 லட்சம் முதல் ரூ. 1.5 கோடி வரை 11.15 % வட்டி விகிதத்தில் கடன் உதவி கிடைக்கும். ஐந்தாவது வகையான “டேக் ஓவர் கல்விக் கடன்”- மூலம் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ. 1.5 கோடி வரை கடன் பெறலாம். 

மேலும், இறுதி வகையான “ஷௌர்யா கல்விக் கடன்”- பாதுகாப்புத் துறையில் பணிபுரியும் வாழ்க்கைத் துணைவர்களுக்கு ரூ. 7.5 லட்சம் முதல் ரூ. 1.5 கோடி வரை 11.75 % வட்டி விகிதத்தில் SBI வங்கி மாணவர்களுக்கு கல்வி கடன் உதவி வழங்குகிறது.




Post a Comment

Previous Post Next Post

High Ads

Square Ads